.

ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது படத்தை ' ஜெய்பீம் 'பட இயக்குனர் இயக்குகிறார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படம் மூலம் ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் அவரது169 வது படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

நெல்சனின் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்ற வருகிறது. சீக்கிரமாக படப்பிடிப்புகள் முடிவடைய இருக்கிறது.

ரஜினிகாந்த் நடிக்கப்போகும் தலைவர் 170 ஆவதுபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

 இப்படத்தை, ஜெய்பீம் படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்ற டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். 

ஜெய் பீம் படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான பல விருதுகளையும் வாங்கியுள்ளார். மேலும் ஜெய் பீம் படத்தில் நடித்த சூர்யா பல கதாபாத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

ரஜினிகாந்த் நடிக்கும் 170 ஆவது படத்தை ' ஜெய்பீம் 'பட இயக்குனர் இயக்குகிறார்!

இந்தத் தகவலை தயாரிப்பாளர் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா புரொடக்ஷன்ஸ் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.

Previous Post Next Post

نموذج الاتصال